தற்போதைய செய்திகள்

விருதுநகரில் கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் படிவம் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சிவகாசி

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கு கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினர்.

வரும் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் கட்சியில் புதிய இளைஞர்களை சேர்க்கும் விதத்திலும் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் கழக சேர்க்கை உறுப்பினர் படிவங்களை விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி வருகின்றார்.

விருதுநகர் மாவட்ட வழக்கறிஞா் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட சிறுபாண்மையினர் அணி செயலாளர் சையதுசுல்தான் இப்ராஹீம், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வசந்தகுமார், தொகுதி கணேசன் இளைஞரணி தங்கபாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை அமைச்சர் வழங்கினார்.

அதிமுகவினர் அனைவரும் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதிமுக உறுப்பினர் அட்டை உயிர் நாடி. விருதுநகர் மாவட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞர்கள் அதிகமாக சேர்க்க வேண்டும். அதிமுக உறுப்பினர் படிவங்கள் தேவைப்படும் நிர்வாகிகள் தொண்டர்கள் என்னை அனுகி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.