சேலம்

விவசாயி தான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்,வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் – கழக நிர்வாகிகளுக்கு ஆர்.இளங்கோவன் வேண்டுகோள்

சேலம்,

விவசாயி தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில் கழக கொடியேற்றி வைத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகளின் தோழனாக விவசாயிகளின் நண்பனாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்ந்து வருகிறார். விவசாயி ஒரு நாட்டை ஆள வேண்டும். விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு. அதனால் நாட்டை ஆள விவசாயி முதல்வராக்க வேண்டும் என சபதம் ஏற்று கழகத் தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும், பொது மக்களிடையே வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த 50-வது ஆண்டு பொன்விழா கட்சி துவக்க விழா நிகழ்ச்சியில் 2021ல் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.

தமிழக மக்களின் மனதில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நீங்கா இடம் பெற்றுள்ளார். அவர் செய்த சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்த சாதனைகளையும் வீடு வீடாக சென்று மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது தகவல் தொழில்நுட்பத்தின் உடைய கடமை. விவசாயம் மட்டும் அல்லாமல் கல்வி தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்தோங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அயராது பாடுபட்டு வருகிறார். அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சேலம் புறநகர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சின்னதம்பி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் தா.மோகன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பி.முருகேசன், நகர செயலாளர் ஒய்.எம்.ராஜமாணிக்கம், துணைத்தலைவர் அப்பாவு, ஏத்தாப்பூர் கூட்டுறவு வங்கி தலைவர் குமார், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை ஆ.கருதிருமன், கழக தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் கனகராஜ், பேரூராட்சி செயலாளர் ஜோதிஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.