திருவண்ணாமலை

வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் 495 கிளை கழகங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள 495 கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் வீதம் 24,75,000 ரூபாய் நிதியுதவியை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தனது சொந்த பணத்தில் வழங்க உள்ள நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 200 கிளைகளும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 150, புதுப்பாளையம் பேரூராட்சியில் 12, ஜமுனாமரத்தூரில் 65, போளூர் ஒன்றியத்தில் 68 என தொகுதி முழுவதும் 495 கிளை கழகங்கள் உள்ளன. இந்த கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் வீதம் நிதியுதவியை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தனது சொந்த பணத்தில் வழங்க முடிவு செய்தார்.

இதனையொட்டி கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்படும் நிகழ்ச்சி லாடவரம், சீட்டம்பட்ட, பாடகம், அலங்காரமங்கலம் கிராமங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்எல்ஏ பங்கேற்று கிளை கழகங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்குவதை நான்கு கிராமங்களில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நான்கு கிராமங்களில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது, மேலும் இளைஞர் பாசறை, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, தகவல் தொழில் நுட்பபிரிவு ஆகியவை அமைப்புகளில் உறுப்பினர்களை சேர்க்க படிவங்களும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இளைஞர் பாசறை சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. தொகுதியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பைகளும் நிவாரணமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் தலைமையில் நடைபெறும் அம்மாவின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே கலசப்பாக்கம் எப்போதும் நம்பர் 1 என்ற இடத்தினை தக்க வைத்துள்ள தொகுதியாகும், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 495 கிளை கழகங்களுக்கும் உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலா 5000 ரூபாய் நிதி வழங்குகிறார். கிளைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதை 4 கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற கிளைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்குவார் என்றார்.

பின்னர் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பேசுகையில், கலசப்பாக்கம் தொகுதியில் அம்மாவின் ஆட்சியில் எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கழகம் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற செய்து அந்த வெற்றியை முதல்வர். துணைமுதல்வரிடம் சமர்பிப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பி.ஜாகீர்உசேன், வழக்கறிஞர் பிரிவு துணைசெயலாளர் செம்பியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், அருள், ஷண்முகப்பிரியா, ஒன்றிய கவுன்சிலர் மலர்பழனி, கூட்டுறவு சங்கத்தலைவர் பத்மாவதி ஜீவரத்தினம், ஆரணி மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், தொழிலதிபர் மகேஷ்பாபு, வந்தவாசி அ.விஜய், கேட்டவரம்பாளையம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.