தற்போதைய செய்திகள்

வீடு இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்துக்கு நிவாரண உதவி-முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

ஆரணி அருகே மழைக்கு வீடு இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்துக்கு நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த துரைசாமி மனைவி ஜெகதாம்பாள் (வயது94). இவர் தனியாக மிகவும் பழமையான ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஆரணியில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழையால் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஜெகதாம்பாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முள்ளிப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி முனியாண்டி, வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தந்ததின் பேரில் வட்டாட்சியர் விசாரணை செய்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முள்ளிப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று ஜெகதாம்பாள் குடும்பத்திற்கு அரசின் நிவாரணத்தொகை ரூ.5000, அரிசி பருப்பு, வேட்டி, சேலை, உள்ளிட்டவைகளை ஜெகதாம்பாள் மகன் மணியிடம் வழங்கினர். மேலும் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடு கட்டித்தர அதிகாரிகளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

இதற்கிடையில் அப்பகுதியில் கோவிந்தசாமி என்பவரின் வீடும் மழையால் இடிந்துள்ள நிலையில் அவருக்கும் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தருமாறு அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பரிந்துரை செய்தார். இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் வக்கீல் க.சங்கர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், வடுகசாத்து சங்கர், புங்கம்பாடி சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.