தற்போதைய செய்திகள்

வீடு இல்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் இடம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

திருவண்ணாமலை

வீடு இல்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் இடம் வழங்கப்படும் என்றும், இதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், சார்பில் அப்துல்லாபுரத்திலும், செய்யாறு வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், செய்யாறு நகர கழகம், சார்பில் செய்யாறிலும், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் சார்பில் மேல்மா கூட்டுரோடிலும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், தர்மபுரி மாவட்ட செயலாளரும், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், கழக அமைப்பு செயலாரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். முன்னாள் அமைச்சரும், வேலூர் மாவட்ட தேர்தல் பொருப்பாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தல் முக்கியமான தேர்தல் திமுக வினர் 10ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் வெறி கொண்டு அலைகின்றனர், கீழ்தரமாக பேசுகின்றனர். ஆகையால் நாம் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு கேட்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. கூட்டனியினர் வெற்றி பெற்று விட்டனர். தற்போது அவர்கள் கூறவுள்ள பொய்யான வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி புரியவைத்து கழகத்தின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக கழக அரசு உள்ளது. கொரோனா காலத்தில் மாவட்டந்தோறும் சென்று ஆலோசனை வழங்கி மக்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்றினார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. ஆனால் தி.மு.க. தலைவர் நான்கு சுவற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். ஊழல் செய்து கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு. இதை யாரும் மறுக்க முடியாது.

தி.மு.க.வின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ஆட்சி செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.
மக்களின் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்காக சுமார் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு, முந்திரி திராட்சை, எலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்புடன் ரூ2500ரொக்கப்பணம் வழங்குகிறார். இதனால் தமிழக மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடு இல்லாத ஏழைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு தலா 3 சென்ட் இடம் வழங்கப்படவுள்ளது. மேற்கண்ட சாதனைகளை எடுத்துக் கூறி வரும் சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் கழகத்தின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.எம்.பாபு முருகவேல், மாவட்ட அவைத்தலைவர் டிகேபி.மணி, மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், அருகாவூர் அரங்கநாதன், சி.துரை, வே.குணசீலன், நாகப்பன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ராஜி, நகர செயலாளர்கள் ஜனார்தனன், எ.அசோக்குமார், ஓட்டல் பாஷா, மாவட்ட எம்.ஜி.ஆ.ர் மன்ற மாவட்ட செயலாளர் பி.ஜாகீர்உசேன், மாவட்ட பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், தெள்ளார் பச்சையப்பன், புதுப்பாளையம் தவமணி, மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, செய்யாறு பூக்கடை கோபால், மகளிரணி மாவட்ட செயலாளர் நளனி மனோகரன், அன்னபூரணி விஜய், கலைவாணி, சுபாஷினி, வந்தவாசி லோகேஷ்வரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் விஜய், பொதுக்குழு உறுப்பினர்கள் பொய்யாமொழி, லதாகுமார், பேரவை மாவட்ட துணை செயலாளர் கன்னியப்பன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.