தற்போதைய செய்திகள்

வீரபாண்டியில் ரூ.2 கோடியில் தடுப்பணை சாலை பணிகள் – மனோன்மணி எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

சேலம்

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான தடுப்பணை மற்றும் சாலை பணிகளை மனோன்மணி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், வீரபாண்டி தொகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தடுப்பணை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி துவக்கி வைத்தார்.

சேலம் வீரபாண்டி சட்டமன்றதொகுதி பனமரத்துப்பட்டி ஒன்றியம் திப்பம் பட்டி ஊராட்சியில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, சாக்கடை வசதி அமைக்கும் பணி, அதே ஊராட்சியில் புதுக்காலனியில் ரூ.11.24 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணி, ரூ.28.50 லட்சம் மதிப்பில் சதாசிவம் காடு அருகில் தடுப்பணை கட்டும்பணி, இரட்டைப்பள்ளி புதூரில் ரூ.44.54 லட்சம் மதிப்பில் புதிய பாதை மற்றும் ஓரடுக்கு கப்பி சாலை, தும்பல் பட்டி ஊராட்சியில் மஞ்சள் பாடியில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிய பாதை மற்றும் ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல்,

அமாணிகொண்டலாம்பட்டி ஊராட்சி சிலோன் காலனியில் ரூ.29.60 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், எஸ்.நாட்டாமங்கலத்தில் முனியப்பன் கோவில் அருகில் ரூ.29.65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், அதே பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த ரூ.4.20 லட்சம் மதிப்பில் திட்டங்கள் என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான ஜெகநாதன், ஒன்றிய ஆணையாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மணிவண்ணன், உதவிப் பொறியாளர் சாந்தி, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சதாசிவம், மணிகண்டன், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் ஏடிசி.நல்லப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில் குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் யூசுப், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், கூட்டுறவு விவசாய சங்க தலைவர் மாரியப்பன், நிர்வாகிகள் தங்கவேல், சாமிநாதன், சபாபதி, கந்தன், தேவராஜ், சரத் பாபு, வெங்கடாஜலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.