தற்போதைய செய்திகள்

வீரபாண்டி தொகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி துவக்கி வைத்தார்

சேலம்

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பேவர் பிளாக் சாலை பணி ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி துவக்கி வைத்தார்.

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, பனமரத்துப்பட்டி ஒன்றியம், நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் உள்ள என்.மேட்டூர் பகுதியில் 4.50 லட்சம் மதிப்பில், ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து மேட்டுத்தெரு பகுதி முழுவதும் காவிரி குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி, பெருமாள் கோவில் மேடு காமராஜ் காலனி பகுதியில் 3.50 லட்சம் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இருந்து நாயக்கன் பகுதிக்கும் கோடிக்காடு பகுதிக்கும் பைப் லைன் அமைத்து குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கும்,

அதே ஊராட்சியில் மலங்காடு எட்டிமரத்து காடு பகுதியில் 9.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி என திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், செந்தில்குமார் (தாசநாயக்கன்பட்டி), ஏழுமலை (நெய்க்காரப்பட்டி), பால் கூட்டுறவு சங்க தலைவர் தனபால், வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காவேரி சித்தன், மஞ்சுளா முருகன், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவி, கிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் யூசுப், துணை தலைவர் ரவி, கழக நிர்வாகிகள் மாரிமுத்து, பிரபாகரன், அக்னீஸ்வரன், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.