வேலூர்

வேலூரில் 250 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரணம் – ஜனனீ. பி.சதீஷ்குமார் வழங்கினார்

வேலூர்

வேலூர் மாநகரில் கழக அரசின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ.பி.சதீஷ்குமார் 250 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி, வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி வழிகாட்டுதலின் படி, வேலூர் மாநகராட்சி, அண்ணா சாலை, எஸ்.கே.எம்.மகாலில் வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், கழக அரசின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும், ரமலான் பெருவிழாவை முன்னிட்டு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மேற்கு பகுதி கழக செயலாளர் எஸ் நாகு (எ) நாகராஜன், அல்லாபுரம் பேரூராட்சி கழக முன்னாள் செயலாளர் கராத்தே புருஷோத்தமன், ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் எம். மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 250 ஏழைஇஸ்லாமிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

நிவாரண பொருட்களை பெற்று சென்ற ஏழை எளிய இஸ்லாமிய மக்கள், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணிக்கும், நிவாரண பொருட்களை வழங்கிய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமாருக்கும்,தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.முனியம்மாள், பகுதி கழக செயலாளர் அன்வர்பாஷா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வி.எல்.ராஜன், வட்டக் கழக செயலாளர் சி.கே.ஜி.விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் செய்திருந்தார்.