தற்போதைய செய்திகள்

ஸ்டாலினை திமுகவினர் நம்பவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

சென்னை

மு.க.ஸ்டாலினை திமுகவினரே நம்பவில்லை. பிரசாந்த் கிஷோரை தான் நம்பியுள்ளனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் ஆவின் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு தீபாவளிக்கு 80 ஆயிரம் கிலோ ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஒரு லட்சம் கிலோ இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ இனிப்பு விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். ச

ர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய வகையிலான இனிப்பை ஆவின் மட்டுமே வழங்குகிறது. கழக ஆட்சியில் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் திமுக ஏய்த்து பிழைக்கும் கட்சி. மு.க.ஸ்டாலினை திமுகவினரே நம்பவில்லை. பிரசாந்த் கிஷோரை தான் நம்பியுள்ளனர். 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றவாளி ஸ்டாலின் தான். கடந்த வருடம் உதயநிதி யாரென்று தெரியாது. ஆனால் அவர் தான் இன்று தி.மு.க. கடையின் தளபதி.

பழம் விழப்போகும் நேரம் பார்த்து காக்கா அதில் உட்கார்ந்தது போன்று ஸ்டாலின் ஆளுநர் மாளிகை நோக்கி போராட்டம் நடத்தினார். திமுக தலைவருடன் உள்ள 22 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. தேவர் பூஜையில் நடந்த நிகழ்வால் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு ஓட்டு கேட்க சென்றால் அவரை விடவே மாட்டார்கள். ஒழுக்கமாக பேசி ஒழுக்கமாக அரசியல் செய்தால் ஒழுக்கமாக பதில் அளிப்போம்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.