தற்போதைய செய்திகள்

100 திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள்-மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

மதுரை

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், சமூக ஆர்வலருமான ஜெயபிரதீப் ஏற்பாட்டில் மதுரையில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கால் மதுரையில் திருநங்கைகள் வறுமையில் தவித்து வருவதை அறிந்த கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், சமூக ஆர்வலருமான ஜெயபிரதீப் மதுரையில் வசிக்கும் 100 திருநங்கைகளுக்கு வழங்குவதற்கான தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைத்தார்

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது துணைவியார் ஜெயந்தி உடன் நேற்று மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 100க்கும் திருநங்ககைளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.