தற்போதைய செய்திகள்

1000 குடும்பங்களுக்கு கழகம் சார்பில் நிவாரணம்-சைதாப்பேட்டையில் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார்

சென்னை-

சைதாப்பேட்டை தொகுதியில் 1000 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகளை தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார்.

சைதாப்பேட்டை தொகுதி 139-வது வார்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 1000 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரண தொகுப்புகளை தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கினார்.

ஜி.அப்பு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.சுகுமார், மேற்கு பகுதி கழக செயலாளர் எ.சோமசங்கரன், எ.எம்.காமராஜ், எஸ்.எம்.சரவணன், சுரேஷ், கே.ஆர்.கதிர்முருகன், கு.செல்வநாயகம், என்.ஆர்.ஜோசப், வாழைதோப்பு பிரபாகரன், என்.பாஸ்கர், எ.பாஸ்கர், எஸ்.செல்வராஜி, வசந்தகுமார், எம்.எஸ்.சசிகுமார், ஈகை சீனு, சுந்தர்ராஜ் அரிகிருஷ்ணன், குமரவேல் நந்தகுமார், ரத்னா ராதா, டேனில் வெங்கடேசன், கலைச்செல்வி, அஜய் சதீஸ், பூங்கா பார்த்திபன், பாலாஜி, சந்துரு, சுரேஷ், கந்தன், பிரேம்குமார், நிதிஷ், ஆர்.மனோகரன், எஸ்.விநாயகமுர்த்தி, எல்.அல்லிமுத்து, பி.வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.