தற்போதைய செய்திகள்

12 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு – மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தகவல்

திருநெல்வேலி

ஊரடங்கு காலத்தின்போது திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அம்மா உணவகங்கள் மூலம் 12 லட்சம் பேருக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மனித புனிதர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்த புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர். கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கொரோனா ஊரடங்கால் சிரமப்பட்ட நெல்லை மக்கள் 12 லட்சம் பேருக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் அம்மா உணவகங்கள் மூலம் விலையில்லா உணவு வழங்கப்பட்டது.

கடந்த மார்ச் 25ம்தேதி முதல் இந்த மாதம் வரை 69 நாட்கள் நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, திம்மராஜபுரம், ஹைகிரவுண்ட், மேலப்பாளையம், திருநெல்வேலி டவுண், தச்சநல்லூர், கடையநல்லூர் என 12க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவு காலை மாலை இரவு என மூன்று வேளையும் தினமும் 12 ஆயிரம் பேருக்கு நான்குமுறை அரசு ஊரடங்கு அறிவித்த வேளையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறப்பான உணவு வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் நெல்லை மாநகர் மக்கள் 12 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட், பகுதி செயலாளர் ஜெனி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சின்னதுரை, வு.நாராயணன், வட்ட செயலாளர் பரத் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.