தற்போதைய செய்திகள்

1754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி-அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூரில் 1754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கடலூர் சுப்புராயலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1754 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.7,19,25,000 திருமண நிதி உதவிகளை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. மாணவிகள் படித்து பட்டம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கிலேயே அம்மா பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ரூ.50,000 என்று அறிவித்தார்.

இன்று வழங்கியுள்ள பயனாளிகளில் 70 சதவிகிதம் பேர் பட்டயம் பெற்ற பயனாளிகள். அம்மா அவர்களின் கனவு இதில் நனவாகி உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

பெண்கள் கல்வியில் முன்னேறினால் ஒரு குடும்பம் முன்னேறும். ஒரு குடும்பம் முன்னேறினால் ஒரு நாடு முன்னேறும் என்று பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அம்மா. இன்று தமிழகம் கல்வி, சுகாதாரம் என அனைத்திலுமே முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முதல் இடம் பிடித்துள்ளது.

ஏழை தாய்மார்கள் தங்கள் மகளின் திருமணத்தில் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று அம்மா அவர்கள் இந்த உன்னத திட்டத்தை வழங்கினார். இந்த திட்டத்தை முதல்வர் எடப்படியாரும் தொடர்ந்து ெசயல்படுத்தி வருகிறார்.

மேலும் தமிழக அரசு பெண்கள் சுய தொழில் செய்வதற்கு நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, அம்மா பரிசு பெட்டகம், வேலைக்கு செல்லும் மகளிர்க்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி அவர்களது முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் அரசு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.