தற்போதைய செய்திகள்

20,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

ஈரோடு

ஈரோடு மேற்கு தொகுதி காசிபாளையம் பகுதியில் 20,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மேற்கு தொகுதி காசிபாளையம் பகுதிக்குட்பட்ட ஈரோடு மாநகராட்சிக்குட் பட்ட 46, 47, 48, 49,50, 37,60-வது வார்டுக்குட்பட்ட கொல்லம்பாளையம், வண்டிப்பேட்டை, லோகநாதபுரம், சோலார், வெண்டிபாளையம், சாஸ்திரி நகர், முத்தம் பாளையம், பகுதிகளில் 20,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பு என 100 டன் அரிசியினை ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.

அரிசி தொகுப்பை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ, காசிபாளையம் பகுதி கழக செயலாளர் கே.பி.கோவிந்தராஜன், நேதாஜி கணேசமூர்த்தி, கேபிள் ரமேஷ், டி.ராஜேந்திரன், பிரஸ் மணி,ஈஸ்வர மூர்த்தி, மணி (எ) பாலசுப்பிரமணி, உஷா, லதா, தங்கராசு, தண்டபாணி, சேகர், சங்கமேஸ்வரன், கெளரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.