234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேச்சு

காஞ்சிபுரம்
2024 நாடாளுமன்ற தேர்தலுடன். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் பகுதியில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் களக்காட்டூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தந்தது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம். அதேபோல் இனிவரும் அனைத்து தேர்தலிலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இப்பகுதியில் அதிக வாக்குகளை பெற்று தந்து தொடர்ந்து கழக வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகங்களை விலைக்கு வாங்கி தி.மு.க செய்யும் தவறுகளை வெளியில் வராமல் மறைக்கின்றனர். ஆனால் டீக்கடையில் டீ குடிப்பதும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டுவதும், வயல்வெளிகளில் சாலை அமைத்து நடப்பது என விளம்பரம் மட்டுமே ஸ்டாலின் செய்து வருகிறார்.
கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் வருமானத்தை பெருக்கி மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை எடப்பாடியார் செய்துதார். ஆனால் வீட்டு வரி, பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்களான அரிசி எண்ணெய் பருப்பு மற்றும் மோட்டார் வாகனம் உள்ளிட்டவைகளின் விலையை பல மடங்கு உயர்த்தி மக்களை கவலைக்கு உள்ளாகியுள்ளது தி.மு.க. அரசு. விலைவாசி உயர்வுக்கு நிதி பற்றாக்குறை என்று கையாலாகாத விடியா அரசு கூறி வருகிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் திடீரென ஏற்படும் வாகன விபத்து, உடல்நலக்குறைவுக்கு அவசர உதவிக்காக கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு தற்போது விடியா அரசு மூடுவிழா நடத்தி உள்ளது.
தி.மு.க.வில் அப்பா, பிள்ளை,பேரன் மட்டுமே முதலமைச்சர் ஆக முடியும். ஆனால் கழகத்தில் மட்டும் தான் கடைக்கோடி தொண்டனும் முதலமைச்சராக முடியும். அதற்கு உதாரணமாக திகழ்பவர் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம்.
மக்கள் அனைவரும் தி.மு.க. அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து விட்டு தேர்தல் வாக்குறுதியில் அளித்த பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் விலையை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளனர்.
ஒரு வருட திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கான ஒரு நல்ல திட்டங்கள் எதுமே செயல்படுத்தவில்லை. அதற்கு மாறாக கழக ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை நிறுத்தப்பட்டு மக்களை கவலைக்குள்ளாகியது தான் விடியா அரசின் சாதனை.
சட்டமன்றத்தில் நல்ல ஒரு எதிர்க்கட்சி தலைவர்களாக எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேசினார்.