தற்போதைய செய்திகள்

3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.16.06 கோடி கடனுதவி – அமைச்சர்கள் வழங்கினர்

ஈரோடு

3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 16.06 கோடி கடனுதவிகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று மூன்றாண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ‘முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” என்ற தலைப்பில் ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி யின் மூன்றாண்டு சிறப்பு திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி,

மகளிர் திட்டத்தின் சார்பில் மாபெரும் விற்பனை மற்றும் கண்காட்சி மற்றும் ஈரோடு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சீர்மிகு நகரம் குறித்த விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்.சி.கதிரவன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி, கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு ரூ.16.06 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விருப்பக் கண்காட்சி, கட்டாயக்கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தையில் சுமார் 36 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும், ஈரோடு மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு பணிகள், புதிய பூங்காக்கள், புதிய வணிக வளாகங்கள் போன்ற திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டனர்.

முன்னதாக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் 190 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.13.72 கோடி வங்கி கடனுதவிகளையும், 3 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.87 லட்சம் கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளையும், 147 ஊராட்சிகளுக்கு ரூ.1.47 கோடி சமுதாய முதலீட்டு நிதி என மொத்தம் ரூ.16.06 கோடி மதிப்பீட்டில் சுமார் 3000 பயனாளிகள் பயனடையும் வகையில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினர்.