தற்போதைய செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு கழகம் சார்பில் நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

திருவண்ணாமலை, ஜூன் 15-

போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்மணி ஊராட்சி பகுதியில்
கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், முதியவர்கள், நலிவுற்ற குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, 14 வகையான காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவை அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வெண்மணி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், போளுர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் செல்வன், ராஜன், சேத்பட் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஸ்ரீதர், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் தரணிதரன், குருவிமலை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.