சிறப்பு செய்திகள்

கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் – தலைமைக்கழகத்தில் எடப்பாடியார் ஆலோசனை

சென்னை

கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக தலைமைக்கழகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக்கழகம்- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (10.10.2022 – திங்கட்கிழமை), (நேற்று) தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் மேற்கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.

இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.