தமிழகம்

57 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு

சென்னை

உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பெ.சந்திரசேகரன், வேப்பேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மு.அழகர்சாமி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த வ.ராஜேந்திரன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கு.சிவகுமார்,

புனிததோமையர்மலை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த டி.ராஜாமணி, ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூ.ரவிந்திரன், B 5 துறைமுக காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சி.முரளிபாபு, சென்னை, குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ச.கார்த்திகேயன்,

கோயம்புத்தூர் மாநகரம், காட்டூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த அ.வில்லியம் பவுல் ராபர்ட், ஆயுதப்படையில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ஸ்மைல், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எம்.கே.ஞானமுத்து,

கோவில்பாளையம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த சி.திருமூர்த்தி, வடவள்ளி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த சு.சதீஷ்குமார், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ம.ரமணக்குமார், திண்டுக்கல் மாவட்டம், காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த தெ.மணிகண்டன்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த வி.பாஸ்கரன், காஞ்சிபுரம் மாவட்டம், சூணாம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.டேவிட், கன்னியாகுமரி மாவட்டம்,

கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஏ.பிரபாகரன், மதுரை மாநகரம், ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த எல்.ஜேசுராஜ், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரா.சிவசுப்பிரமணியன், நாமக்கல் மாவட்டம், நில அபகரிப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நா.ராஜன்,

நீலகிரி மாவட்ட தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எம்.ரவி, தேவாலா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கே.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த செ.மெய்யப்பன்,

சேலம் மாவட்டம், மல்லியக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த க.முருகன், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மா.சந்திரன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணிபுரிந்து வந்த ஆர்.சண்முகராஜ்,

தஞ்சாவூர் மாவட்டம், கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சோ.கஜேந்திரன், தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரா.ஸ்ரீராம், தென்காசி மாவட்ட நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மு.நடராஜன்,

திருச்சிராப்பள்ளி மாநகரம், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ட்டி.முருகையன், திருச்சிராப்பள்ளி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எம்.பிச்சைப்பிள்ளை,

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஐ. ஜெயசிங் சாமுவேல், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஜி.டி.முத்துராமலிங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ்.கமலக்கண்ணன், வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த வி.பிச்சாண்டி, திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எம்.பழனி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எ.தயாளன்,

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த டி.வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சு.அய்யம்பெருமாள், மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த செ.சுதாகர், விருதுநகர் மாவட்டம்,

நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜி.சங்கரநாராயணன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (திருச்சிராப்பள்ளி) முதலாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த சு.மணிகண்டன், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரா.முரளிதரன், (கோயம்புத்தூர்) 4 -ம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மா.முத்துராம்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

சென்னை பெருநகரக் காவல், புனிததோமையர்மலை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த பி.நல்லுசாமி, அரசு அருங்காட்சியக புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மு.புஷ்பநாதன், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ரா.பழனிகுமார்,

புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8-ம் அணியில் காவலராக பணிபுரிந்து வந்த சு.நெல்சன், ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த மா.வரதராஜ், புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரா.சுப்பிரமணியன்,

தென்காசி மாவட்டம், சேந்தமரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த கோ.மாரியப்பன், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரா.ரமேஷ், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த ச.சிங்காரவேலன், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பா.ராமமூர்த்தி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த கே.முருகேசன்,

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த மா.வீரப்பன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.
உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.