தற்போதைய செய்திகள்

750 கிறிஸ்தவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்

சென்னை

விருகம்பாக்கம் தொகுதியில் 750க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி வழங்கினார்.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் கோடம்பாக்கம் மண்டலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு சென்னையில் நோயின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த ஊழியர்களையும் முழு அர்ப்பணிப்புடன் பணி செய்ய அறிவறுத்தினார்.

மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் எண்ணற்ற உதவிகளை செய்து வரும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி அதன் தொடர்ச்சியாக தொகுதிக்குட்பட்ட 129-வார்டில் உள்ள தசரதபுரத்தில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ தேவலாயத்தில் சாலிகிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பால் பாக்கெட், 6 முட்டைகள், கீரை, பிரட், துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, ரவை, பிஸ்கட் பாக்கெட், கபசுர குடிநீர் பாக்கெட், 5 வகையான காய்கறிகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் எஸ்.பி.குமார் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர் கசாலி, ஜெ.வீரபாண்டி, டி.ரமேஷ், கனி, விருகை கார்த்திக், காணுநகர் தினேஷ், திருப்பதி ராஜா, ராஜாலிங்கம், திருமுருகன், ஏ.கார்த்திக், மன்சூர், வைகுண்டராஜன், கார்த்திகேயன், அண்ணாமலை, இ.சங்கர், பில்டர் மோகன், டி.சி.அசோக்குமார், முரளி, ஏ.கே.சீனிவாசன், ரா.தியாகராஜன், முரளி, முத்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.