தற்போதைய செய்திகள்

8 கிளைக்கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 3 கிராமங்களில் உள்ள 8 கிளைக் கழகங்களுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.40 ஆயிரம் நிதியுதவியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யாறு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கடுகனூர், கொர்க்காத்தூர், மேல்நகரம்பேடு, ஆகிய மூன்று கிராமங்களில் கழக கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று 3 கிராமங்களில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பின்னர் இப்பகுதியில் உள்ள 8 கிளைக் கழகங்களுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.40 ஆயிரம் நிதியுதவியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தனது சொந்த பணத்தில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு தெற்கு ஒன்றிய செயலாளர் அருகாவூர் எஸ்.அரங்கநாதன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வழக்கறிஞர் க.சங்கர், எம்.மகேந்திரன், ப.திருமால், வே.குணசீலன், சி.துரை, மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பாபு, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பாராசூட் பெருமாள், கழகத்தினர் பழனி, ஏ.வி.சேகர், பிரகாஷ், சுதாகர், மகாதேவன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.