சிறப்பு செய்திகள்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் – தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

சென்னை

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின்
பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.