தற்போதைய செய்திகள்

பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் வெற்றிக்கனி பறித்து அம்மாவின் பாதத்தில் சமர்ப்பிப்போம் – அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை

திருவள்ளூர்:-

பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் வெற்றிக்கனி பறித்து அம்மாவின் பாதத்தில் சமர்ப்பிப்போம் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஊத்துக்கோட்டையில் எல்லாபுரம் ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றத. கூட்டத்துக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

பேரூர் கழக செயலாளர் ஷேக்தாவுத், எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் கே.ரமேஷ், ஒன்றியக்குழு தலைவர் அம்மணி மகேந்திரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சுரேஷ், பேரூர் கழக அவைத்தலைவர் அருணாச்சலம், பேரூர் கழக பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், தலைமை கழக பேச்சாளர் சி.பி.மூவேந்தன், தலைமை கழக பேச்சாளர் வேதை சிவசண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பாராட்டியுள்ளார். புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பொற்கால ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை தாங்கிக் கொள்ள முடியாமல் கழகத்தை கலவர பூமியாக மாற்ற ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும். ஆனால் திமுகவில் அதன் குடும்ப உறுப்பினர் மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பதவிக்கு வரமுடியும்.

சிறுபான்மையின மக்களை பொய் பிரசாரங்களை சொல்லி ஏமாற்றி தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார் ஸ்டாலின். இவைகளையெல்லாம் முறியடிப்பதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதியில் உள்ள வார்டு மெம்பர், பேரூராட்சி தலைவர்கள், நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள் என அனைத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும்.

தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர்களுக்கு துணையாக இருந்து அவரின் வெற்றிக்கு பாடுபடுங்கள். அந்த வெற்றியை அம்மாவின் பொற்பாதத்தில் சமர்ப்பிப்போம். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் அரசு அதிகாரிகள் மூலம் உடனடியாக நிவர்த்தி செய்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இக்கூட்டத்தில் பிரஸ் மணி, சக்திவேல், சுப்பிரமணி, தங்க குமார், டேவிட், ஒன்றிய கவுன்சிலர்கள் லதா, அசோக்குமார், குழந்தைவேலு, சரவணன், தட்சிணாமூர்த்தி, வேதகிரி, சுகந்தி, பாலாஜி, ஜெயலட்சுமி, குமார், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்