மதுரை

கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்கள் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாடு

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணம் வழங்கப்பட்டது.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் உள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் வீரர்களும், கபடி வீரர்களும் அதிகமாக உள்ளனர்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் கபடி போட்டியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஏற்பாட்டில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பெயரில் பரிசு கோப்பை மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும்.

தற்போது இந்த ஆண்டிலும் 50-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் குழுவினருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச்செயலாளர் சேதுராமன், பகுதி கழக துணைச் செயலாளர் செல்வகுமார், மற்றும் பாலா, சுப்பிரமணி, நாகரத்தினம், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.