தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு வார்டினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உடனிருந்தhர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்தில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலம், வெளி நாடு, வெளி மாவட்டம் ஆகியவைகளிலிருந்து மாவட்டத்திற்கு வருபவர்களை மாவட்ட எல்லையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு ஏதுவுமில்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி, மத்தியப்பல்கலைக்கழகம், மன்னார்குடி அரசு பொது மருத்துவமனை ஆகியவைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கொரோனா வைரஸ் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மூன்று தளங்களிலும் மொத்தம் 128 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா, வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.