தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்று இல்லாத தொகுதி திருமங்கலம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

கொரோனா தொற்று இல்லாத தாலுகாவாக திருமங்கலம் தொகுதி மாறி வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், தூய்மை பணியாளர்கள் ,நெசவாளர்கள், மின்சார வாரிய உதவியாளர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், கைசுமை சிறு வியாபாரிகள், தெரு ஓர வியாபாரிகள் என 1400 நபர்களுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அரிசி, காய்கறிகளை வழங்கி அனைவரும் தமிழக அரசின் உத்தரவுப்படி முறையான சமூக இடை வெளியை கடைபிடிக்க வலியுறுத்தியும் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்குமாறும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் சாந்தி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், காவல்துறை ஆய்வாளர் துரைபாண்டி, பெருந்தலைவர் பாவடியான், முன்னாள் சேர்மன் மாணிக்கம், நகர செயலாளர் நெடுமாறன், பாலசுப்ரமணி, சம்பத், வீ.கல்யாணி, வக்கீல் பாஸ்கர், பிச்சைகனி, ராமகிருஷ்ணன், கண்ணன், முருகன், இளைஞர் அணி பிரிவு கார்த்தி உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

இந்த உலகில் எதை வேண்டுமானாலும் மீட்டெடுக்கலாம். ஆனால் உயிரை கடவுள் நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாது. அதனால் தான் உயிரை காப்பாற்றுகின்ற கடமைக்கும், உரிமைக்கும், முன்னுரிமை கொடுத்து கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தாலும், மக்களின் உயிரை 100 சதவீதம் காப்பாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான வழிகளை செய்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு 4 முறை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனால் தான் தற்போது திருமங்கலம் பகுதியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு பின்னர் ஐந்து பேருக்கும் பரவி தற்போது கொரோனா தொற்று இல்லாத தொகுதியாக திருமங்கலம் மாறி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பெற்ற தாயை கூட தள்ளி நில்லுங்கள் என்று கூறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பாசத்தின், பண்பின் குறைவு அல்ல. உலக சுகாதார நிறுவனம் மத்திய சுகாதார நிறுவனம் நமக்கு அறிவுறுத்தி உள்ளது.

நிகழ்ச்சிகள் நடத்தி நிவாரணப்பொருள் வழங்குவதற்கான காரணம். பொது மக்களிடையே சமூக இடைவெளி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே. எனவே 234 தொகுதியில் திருமங்கலம் தொகுதி முதன்மையான தொகுதியாக இருக்க வேண்டும். அதற்கு திருமங்கலம் தொகுதி மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.