சென்னை

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை,

கழக வளர்ச்சி பணிகள் குறித்து வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,வட்ட செயலாளர்கள்,
ஆலோசனைக்கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் என்.எம்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், என்.எம்.பாஸ்கரன், வியாசை எம்.இளங்கோவன், எம்.ஏ.சேவியர், ஏ.கணேசன், டி.ஒய்கே.செந்தில்குமார், எஸ்.லட்சுமி, வண்ணை கணபதி, கே.செல்வராணி, து.சம்பத், ஜெஸ்டின் பிரேம்குமார், எஸ்.முத்து செல்வம், இ.எஸ்.சதீஷ்பாபு, நெல்லை கே.குமார், எஸ்.ஆர்.அன்பு மற்றும் பகுதி வட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.