தற்போதைய செய்திகள்

தூய்மை காவலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்

சென்னை

விருகம்பாக்கம் தொகுதியில் 129-வது வார்டில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்.

கொரோனா வைரஸ் ஆட்கொல்லி நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்கள், தூய்மை காவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என்று அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் தவறாமல் எண்ணற்ற உதவிகளை தென்சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதியில் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட 129-வது வார்டில் உள்ள சாலிகிராமம் மாநகராட்சி அலுவலகத்தில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 150-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் அரிசி, துவரம் பருப்பு, ரவை, சர்க்கரை, கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, கடுகு, மஞ்சள் பொடி, சீரகம், மிளகாய் பொடி, பிஸ்கட் பாக்கெட், கபசுரகுடிநீர் பாக்கெட், மற்றும் முககவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவை அடங்கிய தொகுப்பை தென்சென்னை தெற்கு மாவட்டம் செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. வழங்கினார்.

ஒவ்வொருவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும், கைகளை அவ்வப்பொழுது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். முகங்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும் பொது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது. தென் சென்னை தெற்கு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அனைவருக்கும் கபசுரக்குடிநீர், முககவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை கே.கே.நகர் திருமலைவாசன் செய்திருந்தார்.

உடன் ஏ.எம்.காமராஜ், உதவி பொறியாளர் எஸ்.மணிமாறன், எஸ்.பி.குமார், அண்ணாமலை, கிருபானந்தஜோதி, ஜி.சுரேஷ், மார்க்கெட்.சேகர், பில்டர்.மோகன், சங்கர், டி.ராஜா, சேகர், வி.கே.தேவி, சத்தியநாராயணன், கேபிள்.கண்ணன், செல்வமணி, அப்பு, ராஜூ, மன்சூர், பாலு மற்றும் கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும், மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.