தற்போதைய செய்திகள்

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தருமபுரி

திட்டங்களை செயல்படுத்த கையாலாகாத ஆட்சி தி.மு.க. அரசை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசமாக பேசினார்.

சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு காலகட்டத்தில் கூட மக்கள் மீது அந்த மின் கட்டண உயர்வை செலுத்தக் கூடாது என முடிவு செய்தவர் எடப்பாடியார் ஆவார். இன்று ஓராண்டு காலம் பதவியேற்ற திராவிட முன்னேற்ற கழக அரசு மக்களுக்கு எத்தனை விதமான இடையூறுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு வரி உயர்வு, கட்டுமாண பொருட்கள் உயர்வு, அனைத்து நிலையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு. ஆனால் பட்ஜெட் போடுகிறார்கள் வரியில்லாத பட்ஜெட் என்று பொய்யான ஒரு தகவலை பரப்புகிறார்கள்.

அவரோடு கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் திமுகவுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு துறை வாயிலாகவும் கூடுதலாக வரி, கட்டணத்தை கூடுதலாக நியமித்தும் வருகின்றனர்.

இது கையாலாகாத தி.மு.க அரசின் கொள்கையாக ஆகி விட்டது. கடந்த காலங்களில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்த போது அம்மா அவர்கள் அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை கட்டணமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினாரோ அதே நிலையை நீடித்து உத்தரவிட்டார்.

திமுக.வினர் மாதந்தோறும் மின் கணக்கீடு கணக்கெடுத்து கட்டணம் செலுத்துவது என்று கூறினார்கள். ஆனால் மாதந்தோறும் கணக்கெடுக்கவில்லை கையாலாகவில்லை.

மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு என்றைக்குமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர். மக்களுக்கு பயன்படுகின்ற அனைத்து திட்டங்களும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அவர்களால் வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது.தாலிக்கு தங்கம்,இரு சக்கர வாகனம், கொடுத்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள்.ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மடிக்கணினி திட்டம் நிறுத்தி விட்டார்கள்.

மற்ற பணிகளுக்கெல்லாம் நிதி ஒதுக்க முடிகிறது, மக்களும் மாணவர்களும் பயன்படுகின்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கையாலாகவில்லை. மக்கள் விரோத ஆட்சியை செய்து கொண்டிருக்கிற அரசு தான் திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றாத திமுக அரசு,

மாதம் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் வழங்கவில்லை. கேஸ் 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக கூறினார்கள் அதை வழங்கவில்லை. மக்களுடைய பயன்பாடு குறித்து சிந்திக்க கூடிய அரசாக திமுக அரசு இல்லை. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். விரைவில் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். தமிழகத்திலிருந்து திமுக அகற்றப்பட வேண்டிய ஆட்சி.

இன்று குடிநீர் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். கொரோனா காலத்தில் கூட எவ்வித கடன்பழுவும் இல்லாமல் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் ஆவார். ஆகவே தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மலர வேண்டும் அப்போது தான் தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் சலுகைகள் பெற முடியும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றாலும். கழக ஆட்சியால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாத கையாலாகாத அரசு தான் திமுக அரசு. அதனுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பேசினார்.