தற்போதைய செய்திகள்

ஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

ஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கடனுதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழா நடைபெற்றதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூற்றாண்டு விழாவை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வரவேற்றார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், ஆகியோர் சிறப்புரையாற்றினர், நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் எ.அசோக்குமார் வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்ச்சியில் வங்கிக்கு இடம் வழங்கிய லிங்கப்பன் நாயுடுவின் மகன் யாதவ்மூர்த்தி, வங்கியின் 1960 முதல் 1990 வரை தலைவராக இருந்த பட்டாபிராம அய்யரின் வாரிசு வழக்கறிஞர் ஜெகதீசன், வங்கியின் மூத்த உறுப்பினர் எம்.கோவிந்தசாமி, வங்கியின் நீண்டநாள் வைப்புதாரர் லோகநாதன், கடன் பெற்று தவணை தவறாமல் திருப்பி செலுத்தி வந்த உறுப்பினர்கள் பிரபாவதி, அருணகிரி, மற்றும் 5மகளிர்குழுக்களுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

மேலும் மாற்றுதிறனாளி, மகளிர் குழு கடன், பணிபுரியும் மகளிர்கடன், சிறுவணிக கடன், மகளிர் தொழில்முனைவர் கடன், வீடு அடமானக்கடன் என 160 பேருக்கு 76.60 லட்ச ரூபாய் கடன் உதவியை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

விழாவில் மாவட் பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், பிஆர்ஜி.சேகர், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், நிர்வாகிகள் கலைவாணி, பிரபு, இபிநகர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சரக துணைப்பதிவாளர் மு.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.