தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் -திருச்செந்தூரில் வாலிபர் கைது

தூத்துக்குடி
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்கு ரதவீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுயம்பு மகன் சத்யராஜ் (வயது 27) என்பதும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சத்தியராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.18,000 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.