தற்போதைய செய்திகள்

பாமரனும் நேசிக்கும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் பரமக்குடி ஒன்றிய கழகம் தீர்மானம்

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய கழகம் சார்பில் பார்த்திபனூரில் நடைபெற்ற கூட்டத்தில்
பாமரனும் நேசிக்கும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட எடப்பாடியார் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட கழகத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிர்வாகி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடியாரை ஒற்றை தலைமையேற்று வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பரமக்குடி ஒன்றிய கழத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்தையா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் பாமரனும் நேசிக்கும், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட எடப்பாடியார் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் பரமக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அதேபோல் தொண்டர்கள் தீர்ப்பே இந்த இயக்கத்தின் இறுதியான தீர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இந்த இயக்கத்தை வழிநடத்த எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிச்சயம் உங்கள் எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற வகையில் வருகின்ற 11-ம்தேதி நடைபெறும் கழக பொதுக்குழுவில் கழகத்தின் ஒற்றை தலைமையாக எடப்பாடியார் பொறுப்பேற்பார். அதனை தொடர்ந்து இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்துவார்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.