மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர்,
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதி உடுமலை தெற்கு ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பில் மசூதி முதல் மீராமைதீன் ராவுத்தர் வீடு வரை கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனுர் ஊராட்சி குட்டியக்கவுண்டனூர் கிராம
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.6.20 லட்சம் மதிப்பில் பகுதி நேர நியாய விலைக்கடை அமைப்பதற்கான பணியையும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் தம்பு (எ) எஸ்.டி.கே.பார்த்தசாரதி, உடுமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.போகநாதன், ஒன்றிய கழக துணை செயலாளர் செந்தில், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி நந்தகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரன், தளி பேரூராட்சி கழக செயலாளர் பி.ராமலிங்கம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு தலைவர் சஞ்சய், கிளை கழக செயலாளர்கள் செல்வராஜ், ஆனந்தன், ஜெயமணி, காளிமுத்து, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.