சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

பழிவாங்கும் செயலை நிறுத்திவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த அறிவுரை

சென்னை

கழகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்று பழிவாங்கும் நோக்கத்தோடு விடியா தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை, விடியா அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. தி.மு.க. அரசின் இந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கு கழகத்தினர் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் என்று ஏற்கனவே முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமானே எடப்பாடி கே.பழனிசாமி பலமுறை தி.மு.க. அரசை எச்சரித்து உள்ளார். ஆனாலும் தி.மு.க. அரசின் அராஜம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அ.இ.அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா தி.மு.க அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.