சிறப்பு செய்திகள்

மக்கள் தலையில் கடும் சுமையை விடியா தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை

கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தி விடியா தி.மு.க. அரசு அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசுக்கு, தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி
மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.