ராணிப்பேட்டை

அதிகாரியை சரமாரியாக தாக்கிய தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து அரக்கோணத்தில் போராட்டம்

ராணிப்பேட்டை

ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டரை பங்கு போட்டுக்கொள்வதில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலின் போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தி.மு.க ஒன்றிய துணை செயலாளரை சரமாரியாக தாக்கினார். இச்சம்பவத்தை கண்டித்தும், பணிகளை புறக்கணித்து அரசு ஊழியர்கள் விடியா தி.மு.க. அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி( பொறுப்பு) அலுவலராக ப ஜெயவேலு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் 15-வது நிதி குழு மானிய நிதி ரூ. 1 கோடி மதிப்பிலான டெண்டர் பிரிப்பதில் தி.மு.க.

ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அரக்கோணம், அகன் நகர், வெங்கடேசபுரம், பெருமுச்சி பகுதியை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர்லட்சுமி காந்தன் என்பவர் திடீரென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ப.ஜெயவேலுவை அலுவலகத்தில் அரசு பணியினை செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளை பேசி கை கலப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதைத்தொடந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இருக்கைக்கு வந்து அவரை தாக்கி, நாங்கள் கூறுவதை கேட்காவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன், நடப்பது எங்கள் தி.மு.க ஆட்சி, என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானஜெயவேலு, தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் லட்சுமிகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடியா தி.மு.க அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ? என பொதுமக்கள் ஆவலுடன் எதிரபார்க்கின்றனர். விடியா தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கப்பட்டதால் ஏழு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் பணியை புறக்கணித்து விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரியை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளாரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலுவை நேரில் சந்தித்து நலன் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.