எடப்பாடியார் தலைமை தாங்கி நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் திருப்புமுனை ஏற்படும்

சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேச்சு
சென்னை,
தி.மு.க அரசை கண்டித்து சென்னையில் கழக எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். எனவே கழகத்தினர் அனைவரும் அலைகடலென திரண்டு வாருங்கள் என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு விடுத்து உள்ளார்.
வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை புறநகர் மாவட்டம், குன்றத்தூர் கிழக்கு ஒன்றியக்கழகம் சார்பில் கோவூரில் நடைபெற்றது.
குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான டாக்டர் கே.பி.யேசுபாதம் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் எஸ்.எம்.குமாரசிவம் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
கழக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கியது. சட்டம். ஒழுங்கு பேணி காக்கப்பட்டு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக விளங்கியது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு எங்கு பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
எனவே தான் தமிழக மக்கள் எப்போது கழக ஆட்சி வரும். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் எப்போது முதலமைச்சர் ஆவார் என்று எதிர்நோக்கியுள்ளனர்
தி.மு.க அரசை கண்டித்து சென்னையில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். சென்னை புறநகர் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கழகத்தினர் அனைவரும் அலைகடலென திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் பேசினார்.
இந்த கட்டத்தில் ஒன்றிய கழக இணைச்செயலாளர் அற்புதமேரி தமிழ்தாசன், ஒன்றிய கழக துணைசெயலாளர் கீதா சிவராமன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஏ.என்.இ.பூபதி, மாவட்ட பிரதிநிதிகள் இளவரசி நாகப்பன், கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் மற்றும் மைக் முனுசாமி, பி.எஸ்.ரகோத்மன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் எம்.சுந்தரேசன் நன்றி கூறினார்.