எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் திட்டவட்டம்

சேலம்,
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வென்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் கூறி உள்ளார்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து
சேலம் புறநகர் மாவட்ட கழகம் சார்பில், ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
விடியா தி.மு.க. அரசு வாக்களித்த மக்களுக்கு வஞ்சகம் செய்யும் அரசாக உள்ளது. இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவுக்கு உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள், ஆனால் விலை குறைக்காத காரணத்தினால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால் கழக ஆட்சியின்போது ஏழை மக்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எடப்பாடியார் விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கழக ஆட்சியின் போது அம்மாவுடைய ஆட்சி காலத்தின் போதும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்தின் போதும் சரி தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது.
ஆனால் தற்போது இந்த விடியா தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் எப்பொழுது மின்சாரம் வரும், எப்பொழுது மின்சாரம் போகும் என்பதே தெரியவில்லை. கழக ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான இருந்தது.
இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காவல்துறை செயல்பட முடியாத அளவிற்கு உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வென்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார்.
இவ்வாறு சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் பேசினார்.