செங்கல்பட்டு

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

செங்கல்பட்டு

கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.

வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-

வீட்டு வரியை உயர்த்தி மக்களை வேதனைக்குள்ளாக்கிய நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. இதனால் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து விட்டோமே என்று அனைத்து தரப்பு மக்களும் வேதனை அடைந்துள்ளார்கள்.

இத்தகைய அராஜக தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். கழக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்பதனையும் உணர தொடங்கி விட்டார்கள். கூடிய விரைவில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலரும். இது உறுதி.

இவ்வாறு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.