தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி -முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை.

தி.மு.க.வுக்கு மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவதி உறுதியாகி விட்டது என்று ஆரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டமாக கூறினார்.

சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆரணியில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

தமிழகத்தில் விடியா தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் வகையில் விலைவாசி உயர்ந்து வருகிறது. குறிப்பாக வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்பது அடிமட்ட மக்கள் பெரிதும் பாதிக்கிறது அன்றே திமுகவில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார் வரும் தேர்தலில் தி.மு.க தோற்றால் அது மின்சாரத்தால் தான். அது தான் உண்மை.

அப்போது ஆட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர 10 ஆண்டு காலம் ஆனது. அதேபோல் மீண்டும் தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு தொடர்கிறது. மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிக்கு மக்களின் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. ஆகையால் எடப்பாடியர் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.