தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் குற்றச்சாட்டு

அம்பத்தூர்,

தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கழக அமைப்பு செயலாளரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசினார்

வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு சொத்துவரி உயர்வு மற்றும் நேரத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெறற ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவள்ளுர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கி பேசியதாவது:-

அம்மா வழியில் வந்த எடப்பாடியார் ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சி பதவியேற்றவுடன் கழக ஆட்சியில் மக்களுக்கு வழங்கி வந்த தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி, லேப்டாப், உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் வகையில் சொத்து வரி, மின் கட்டண வரி, ஆவின் பால் பொருட்களை விலை உயர்வு, என அனைத்து பொருட்களின் விலையும் அதற்குண்டான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால் கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து இன்னும் மீளாத மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கழக ஆட்சி காலத்தில் மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள். அப்போது தமிழகம் சிறந்து விளங்கும். தற்போது தமிழகத்தை எந்த மாநிலத்தோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கழக ஆட்சி காலத்தில் ஏராளமான குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்ட காரணத்தினால் இன்று அனைத்து ஏரி குளங்களும் நீர் தகும்பி நிரம்பி வழிகின்றன.

இதன் மூலம் குடிமராமத்து நாயகனாக எடப்பாடியார் திகழ்கிறார். கழக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க முற்றிலும் முடக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது. குற்ற சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவள்ளுர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா.பென்ஜமின் பேசினார்.