சிறப்பு செய்திகள் மற்றவை

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு

சென்னை

நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியின பெண்மணி திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

15-வது இந்திய குடியரசுத் தலைவராக, நேற்று பதவியேற்றுள்ள, முதல் பழங்குடியின பெண்மணி, திரவுபதி முர்முக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.