விராலிமலை ரேஷன் கடையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடியை முன்னாள் அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அர்பன் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் இயங்கும் அம்மா பல்பொருள் நியாயவிலைக்கடையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார் அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவைகள் தரம் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் பொருட்கள் சரியான முறையில் கிடைக்கிறதா, எடை அளவு சரியாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்டறிந்தார். மேலும், அங்கிருந்த அரிசியை அள்ளி எடை போடும் இயந்திரத்தில் போட்டு எடையளவை சேதனை செய்து பார்த்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜன், திருமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன், ஐயப்பன், சுப்ரமணியன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன்,நிலவள வங்கி தலைவர் மோகன், துணை தலைவர் தீபன், அண்ணா தொழிற்சங்கம் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் வேல்மணி, பிரபாகரன், ரஞ்சித்குமார், பாண்டியன், ராஜா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.