கழகம் என்று சொன்னால் ஒரு குடும்பம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம்

செங்கல்பட்டு
கழகம் என்று சொன்னால் குடும்பம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இல்ல காதணி விழாவில் பங்கேற்று வாழ்த்தி பேசிய கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்-புஷ்பா ஆறுமுகம் தம்பதியரின் இல்ல காதணி விழா திருக்கழுக்குன்றம் ஜி.வி.என் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து குழந்தைகளை வாழ்த்தி கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் கழக அவைத்தலைவர் அ.தமிழ் மகன்உசேன், மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன், வி.சோமசுந்தரம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் இல்ல காதணி விழா நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெறுகிறது. எங்கள் குடும்பத்தின் ஒருவராக மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகத்தை பார்க்கிறோம். கழகம் என்று சொன்னால் குடும்பம். ஆகவே இது ஒரு குடும்பம் நிகழ்ச்சியாக கருதி நாம் அனைவரும் பங்கேற்று இருக்கிறோம்.
திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் நீண்ட நெடிய காலமாக கழகத்தில் பணியாற்றி வருகிறார். இதயதெய்வம் அம்மா அவர்களின் அன்பைப்பெற்றவர். அன்று முதல் இன்று வரை அடிபிறழாமல் கழகத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உழைப்பு இந்த இயக்கத்தில் பெரும் பங்களிப்பை தந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய மகன் எ.மோகன்ராஜ்-கவிதா ஆகியோர்களின் குழந்தை எம்.கே.சஞ்சித் குமரன்,எம்.கே.தாரா, மற்றும் அருண் பிரகாஷ்-எழிலரசி ஆகியோரின் குழந்தை ஏ.பபிதா, ஏ.இ.ரிஷிவர்மன் ஆகியோரின் காதணி நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெறுகிறது.
இக்குழந்தைகள் எல்லாம் வல்ல இறைவனின் அருள ஆசியுடன். இங்கு வருகை புரிந்து இருக்கின்ற அனைவரின் ஆசியுடனும், மற்றும் என்னுடைய ஆசியும் வழங்குகிறேன். மேலும் குழந்தைகள் எல்லா வளத்தையும் பெற்று நீண்ட ஆயுளுடன் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.