தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை

விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தினம் கொள்ளை, கொலை, கடத்தல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக அவைத்தலைவர் எம்.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜி.கண்ணன் வரவேற்புரையாற்றினார். தரங்கம்பாடி பேரூராட்சி கழக அவைத்தலைவர் கே.கண்ணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட கழக அவைத்தலைவர் பி.வி.பாரதி, மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன், மாவட்ட மகளிரணி செயலாளர் மா.சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசியதாவது.

விடியா தி.மு.க ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள், அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டது. தேர்தல் நேரத்தை பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விடியா தி.மு.க எந்த செயலிலும் ஈடுபடவில்லை.

தற்போது அ.தி.மு.கவில் நன்றாக உழைப்பவர்களை பார்த்து தேடி கண்டுபிடித்து ஏதாவது வழக்கு போடுவது விடியா தி.மு.க அரசின் வேலையாகி விட்டது. இதற்கு கழகத்தினர் பயந்து விட மாட்டார்கள். ஏன் என்றால் ஏற்கனவே தி.மு.க.வை பார்த்து விட்டோம். விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தினம் கொள்ளை, கொலை, கடத்தல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

விவசாயத்திற்கு தேவையான யூரியா போன்ற இடுபொருட்களை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கூறுகின்றன போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஆக வேளாண்மைத்துறை அமைச்சர் கூறுகிறார். இதில் நீலிக்கண்ணீர் வடிக்க அவசியமில்லை. இரண்டு மாதங்களாகவே யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது என்று எடப்பாடியார் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் யூரியா தேவையை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் இருப்பு வைப்பது தான் நல்ல அரசுக்கு அழகு. அதை செய்ய தவறிய இந்த அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடுகிறேன் என்று விளம்பரத்திற்காக செய்வதோடு நின்று விடாமல் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்கிட வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் கழகம் எளிதாக வெற்றிபெறும். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசினார்.