தற்போதைய செய்திகள்

கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளிக்கும் சென்னை -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சென்னை

கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளிக்கும் சென்னை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.

உழைப்பிற்கும், ஒற்றுமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்து, நெஞ்சில் கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளித்துக்கொண்டிருக்கும் சென்னை மாநகரின் மாண்பையும், பாரம்பரியத்தையும் காத்து பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.