திருவண்ணாமலை

இளைஞர், இளம்பெண் பாசறைக்கு உறுப்பினர் சேர்ப்பு முகாம் -அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 1, 2, 3, 16, 17, வார்டுகளில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். முன்னதாக நகர கழக செயலாளர் ஜெ.செல்வம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளை 8 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுகளிலும் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,வருகின்ற சட்டமன்ற தேர்தலை வியூகம் வகுத்து தமிழகத்தில் அரசியல் சாணக்கியர்களாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் கழக இணைய ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அரசியல் ரீதியாக பல்வேறு அரசியல் யூகங்களை இன்றைக்கு வகுத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர்.

தமிழகத்தில் எந்த கூட்டணி அமைந்தாலும் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தான் அமையும் என்று நேற்றைய தினம் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

எனவே தமிழகத்தில் இன்றைக்கு ஒரு அதிகாரமிக்க இயக்கமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரு இயக்கமாக மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கின்ற ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு மீண்டும் கோடான கோடி கழக தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும் செப்டம்பர் 4-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனாதடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட இலக்கிய அணி செயலாளரும், முதல் மண்டல பொறுப்பாளருமான இ.என்.நாராயணன் செய்திருந்தார்.