சென்னை

பெற்றோரை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு திருமண உதவி காவல் ஆய்வாளர் வழங்கினார்

சென்னை

தாய் தந்தையை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு தலைமை செயலக குடியிருப்பு வளாக ஜி5 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி திருமண உதவி செய்தார்

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் வசிப்பவர் சுகன்யா இவரின் தாயார் புற்றுநோயால் இறந்துவிட்டார். தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தாய் தந்தை இருவரும் இறந்துவிட அவரது சித்தியான சுரேகாவோடு வாழ்ந்து வருகிறார். அவரது சித்திக்கு இரண்டு குழந்தைகள் அவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் வசிப்பது வாடகை வீடு கொரோனா காலகட்டத்தில் வீட்டு வாடகையும் செலுத்த முடியாத நிலைமை சுகன்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. இவருக்கு கண் பார்வை சரியாக தெரியாது. இவருக்கு கோயமுத்தூரிலிருந்து வரன் அமைந்ததால் திருமண அழைப்பு பத்திரிக்கை அடிக்கப்பட்டு அனைவருக்கும கொடுக்கப்பட்டது.

ஆனால் பண வசதியோ பொருள் வசதியோ இல்லாத காரணத்தினால் என்ன செய்வது என்று புரியாத நேரத்தில் சமூக வலைத்தளமான FaceBook ல் இவரின் நண்பர்கள் அனுப்பிய செய்தியை பார்த்து ஒரு மாதத்திற்கு முன்பு ஜி5 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அந்த பெண்ணை சந்தித்து கஷ்டமான சூழ்நிலை கேட்டறிந்து நாங்கள் உதவி செய்கிறோம் என்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள்,

தலைம காவலர்கள், முதல்நிலை காவலர்கள், காவலர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் 4.9.2020ல் நடக்கவிருக்கும் சுகன்யா திருமணத்திற்கு சீதனப் பொருட்களான தாலி, கட்டில், பீரோ,கம்மல்- 1/2 சவரன், மூக்குத்தி-1 gm, வெள்ளி கொலுசு, ரூ.5000, பீரோ, கட்டில், மெத்தை, மிக்சி, தவா, உணவு பாத்திரங்கள், வாட்டர் ஹீட்டர், பிலாஸ்க், பட்டுப்புடவை, வாயில் புடவை -3, மின்விசிறி, பழங்கள் உட்பட குடும்பம் நடத்த அனைத்து பொருட்களை அவருக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட மணப்பெண் மற்றும் அவரது சித்தி ஆகியோர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு நன்றி தெரிவித்தார்.