தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் அமைய வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம், திட்டவட்டமாக தெரிவித்த பெண்கள்

தூத்துக்குடி,

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவதாகவும், அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. எம்.எல்.ஏ தனது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவேங்கடம் கழக முக்கிய பிரமுகரும், கோவில்பட்டி ஆல்இன்டியா & பியூட்டி அசோஷியேசன் தலைவரும் (அழகு கலை நிபுணரும் ) பெண்கள் குழு தலைவியுமான நிர்மலாதேவி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்்.

நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி பெண்கள் ஏராளமானோர் அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன் மீண்டும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறினர்.

அப்போது அவர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறுகையில், தமிழகத்தில் படித்த பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியாக ரூ. 50 ஆயிரமும் வழங்கி சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவரது சீரிய வழியை பின்பற்றி தாய்மார்கள் போற்றி புகழக்கூடிய வகையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை நடத்திக்காட்டிவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவபெருமாள், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு ஈஸ்வரமூர்த்தி, சங்கர் கணேஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் போடுசாமி, கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், கயத்தார் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ், கயத்தாறு கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கழக பேச்சாளர் பெருமாள்சாமி, மேலே இறால் கிளை செயலாளர் பொன்ராஜ், கோவில்பட்டி நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாமை அய்யாத்துரை, பழனி முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்