தற்போதைய செய்திகள்

சுவாமிமலையில் புதிய கால்நடை மருந்தகம் – அமைச்சர் இரா.துரைக்கண்ணு திறந்து வைத்தார்

தஞ்சாவூர்

சுவாமிமலையில் புதிய கால்நடை மருந்தகத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு திறந்து வைத்தார்

கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 23.10 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டு கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார்.

வேளாண்மைத்துறை அமைச்சரால் நேற்று திறக்கப்பட்டுள்ள சுவாமிமலை கால்நடை மருந்தகத்தின் மூலம் சுவாமிமலை பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள 6 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 2560 பசுக்கள், 12 எருமைகள், 8823 வெள்ளாடுகள், 5 செம்மறியாடுகள், 15101 கோழிகள் என மொத்தம் 26501 கால்நடைகள் பயன்பெறும். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்.தமிழ்ச்செல்வம், கும்பகோணம் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.